/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மொழியாற்றல் போட்டி; மாணவர்களுக்கு பரிசு மொழியாற்றல் போட்டி; மாணவர்களுக்கு பரிசு
மொழியாற்றல் போட்டி; மாணவர்களுக்கு பரிசு
மொழியாற்றல் போட்டி; மாணவர்களுக்கு பரிசு
மொழியாற்றல் போட்டி; மாணவர்களுக்கு பரிசு
ADDED : செப் 10, 2025 10:34 PM

கோவை; சன்சைன் குழும பள்ளிகள் மற்றும் ஏ.வி.பி. பள்ளி சார்பில், மாணவ நேசன் தமிழ் மன்றத்தின் இரண்டாம் ஆண்டு விழா, சிறப்பாக நடந்தது.
தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாணவர்கள் இடையே மொழிப் பற்றை வளர்ப்பதற்காக நடத்தப்பட்ட இப்போட்டிகளில், கோவையைச் சேர்ந்த 25 பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. சன்சைன் குழும பள்ளிகளின் இயக்குனர் செந்தாமரை, தாளாளர் எழிலரசி, ஏ.வி.பி.பள்ளி தாளாளர் பூங்குழலி, முதல்வர் ஜெயலட்சுமி பங்கேற்றனர்.