/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரியில் கருத்தரங்கு ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரியில் கருத்தரங்கு
ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரியில் கருத்தரங்கு
ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரியில் கருத்தரங்கு
ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரியில் கருத்தரங்கு
ADDED : செப் 14, 2025 11:29 PM

கோவை; அண்ணா பல்கலை மண்டல மையத்தின் காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை மையம் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லூரி இணைந்து, யுனிசெப் இந்தியா மற்றும் இங்கிலாந்து, கிளைமேட் காம்பாட்டிபிள் குரோத் ஆதரவுடன், 'யூத் பார் கிளைமேட் ஆக்சன் -லீட் தி சேஞ்ச்' எனும் கருத்தரங்கு கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் பேசுகையில், ''நகரின் நிலையான வளர்ச்சிக்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிய முயற்சிகளே பெரிய மாற்றத்தை உருவாக்கும். இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது,'' என்றார்.
அண்ணா பல்கலை சிவில் இன்ஜினியரிங் துறைத் தலைவர் கண்மணி வரவேற்றார். ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி முதல்வர் சுதா மோகன்ராம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு, மாணவர்களுக்கிடையே காலநிலை தொடர்பான போட்டிகள் நடந்தன.