/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அக்வாசப் இன்ஜினியரிங் பெற்றது தேசிய விருது அக்வாசப் இன்ஜினியரிங் பெற்றது தேசிய விருது
அக்வாசப் இன்ஜினியரிங் பெற்றது தேசிய விருது
அக்வாசப் இன்ஜினியரிங் பெற்றது தேசிய விருது
அக்வாசப் இன்ஜினியரிங் பெற்றது தேசிய விருது
ADDED : செப் 14, 2025 11:29 PM

கோவை; சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான 2024ம் ஆண்டுக்கான விருதை, கோவையை சேர்ந்த அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனம் பெற்றுள்ளது.
தேசிய அளவில் ஏற்றுமதி பிரிவில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கான, 56வது விருது வழங்கும் நிகழ்வு, டில்லியில் கடந்த 8ம் தேதி நடந்தது.
சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருதை, மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ்கோயல் வழங்கினார்.
2024ம் ஆண்டுக்கான விருதை, அமைச்சரிடம் இருந்து அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவன மார்க்கெட்டிங் பிரிவு துணைத்தலைவர் கிருஷ்ணகுமார், ஏற்றுமதி பிரிவு பொது மேலாளர் உமர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனம், பம்ப் உற்பத்தியில் தேசிய அளவில் முன்னிலை பெற்று வருகிறது. 2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை, 3 முறை இவ்விருதை இந்நிறுவனம் பெற்று கோவைக்கு பெருமையை சேர்த்துள்ளது.
இந்நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் ஜித்தின் பிரசாத், ஏற்றுமதி பிரிவு உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.