Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் செயற்குழு கூட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் செயற்குழு கூட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் செயற்குழு கூட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் செயற்குழு கூட்டம்

ADDED : ஜன 06, 2024 12:55 AM


Google News
கோவை;சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் வீரபத்திரன் தலைமை வகித்தார்.

காலை உணவு திட்டத்தை, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,780 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 9ம் தேதி பிற்பகல், 3:00 மணிக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து பேரணி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் பிரகலதா, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சாந்தி, மாநில பொருளாளர் ஆனந்தவள்ளி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வெங்கட சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us