/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாரதீய வித்யா பவனில் சங்கீத உபன்யாசம் பாரதீய வித்யா பவனில் சங்கீத உபன்யாசம்
பாரதீய வித்யா பவனில் சங்கீத உபன்யாசம்
பாரதீய வித்யா பவனில் சங்கீத உபன்யாசம்
பாரதீய வித்யா பவனில் சங்கீத உபன்யாசம்
ADDED : ஜூலை 07, 2024 10:09 PM

கோவை:கலைமாமணி விசாகா ஹரியின், சங்கீத உபன்யாசம் நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவன் மையத்தில், இரண்டு நாட்கள் நடக்கிறது.
பாரதீய வித்யா பவன் சார்பில், பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கலைமாமணி விசாகா ஹரி 'விஷ்ணு சஹஸ்ரநாம மஹிமா' என்ற இரண்டு நாள், சங்கீத உபன்யாசம் நிகழ்த்துகிறார்.
முதல் நாளான நேற்று மாலை, விசாகா ஹரி பேசுகையில், ''விஷ்ணு சஹஸ்ரநாமம் தலைசிறந்த இறைவணக்கம். இந்த நாமத்தை தியானித்து, துதித்து, வணங்கும் ஒருவர் எல்லா துக்கங்களையும் கடந்து விடுவார். தற்போதைய காலத்தில், தர்மம் என்னவென்று தெரியாமல் பலர் குழப்பத்தில் உள்ளனர். குழப்பங்களை நீக்கும் வகையில் அரச தர்மம், நெருக்கடி நிலை தர்மம், ஆண், பெண் தர்மம், தான தர்மம், வீடு பெறும் தர்மம் என பல தர்மங்களை பீஷ்மர் உபதேசித்துள்ளார்,'' என்றார்.
தொடர்ந்து இன்று மாலை, 6:00 முதல் 8:00 மணி வரை உபன்யாசம் நடைபெறுகிறது.