/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறையில் 2 கிராம் கஞ்சா பறிமுதல் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை சிறையில் 2 கிராம் கஞ்சா பறிமுதல் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை
சிறையில் 2 கிராம் கஞ்சா பறிமுதல் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை
சிறையில் 2 கிராம் கஞ்சா பறிமுதல் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை
சிறையில் 2 கிராம் கஞ்சா பறிமுதல் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 07, 2024 10:07 PM
கோவை:கோவை மத்திய சிறைவாசியிடம், 2 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மத்திய சிறையில் சரவணப்பாண்டி, பிரவீன்குமார் ஆகியோர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறை அதிகாரிகள் மொபைல்போன் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து, திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சரவணப்பாண்டி, அதிகாரிகளை சோதனை செய்யவிடாமல், தடுத்து வாக்குவாதம் செய்துள்ளார். அறையில் சோதனையிட்டபோது, 2 கிராம் கஞ்சா இருந்துள்ளது.
பிரவீன்குமார் கடந்த, 1ம் தேதி கோர்ட் சென்று திரும்பியபோது, கஞ்சாவை மறைத்து கொண்டுவந்து, சரவணப்பாண்டியிடம் கொடுத்தது தெரியவந்தது. ஜெயிலர் சரவணக்குமார் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.