/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துருப்பிடித்த நிலையில் கேட்பாரற்ற மின்கம்பங்கள் துருப்பிடித்த நிலையில் கேட்பாரற்ற மின்கம்பங்கள்
துருப்பிடித்த நிலையில் கேட்பாரற்ற மின்கம்பங்கள்
துருப்பிடித்த நிலையில் கேட்பாரற்ற மின்கம்பங்கள்
துருப்பிடித்த நிலையில் கேட்பாரற்ற மின்கம்பங்கள்
ADDED : ஜூன் 04, 2025 08:33 PM

நெகமம்; நெகமம் பகுதியில் துருப்பிடித்த நிலையில் இருக்கும் மின்கம்பங்களை அகற்ற வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
நெகமம் துணை மின்நிலையத்தில் இருந்து, பல்வேறு கிராம பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நெகமம் ரங்கம்புதூர் ரோட்டில் சில மாதங்களுக்கு முன், மின்கம்பம் மாற்றியமைக்கப்பட்டது.
ஆனால், பழைய இரும்பு மற்றும் கான்கிரீட் மின்கம்பங்களை அங்கிருந்து எடுத்து செல்லாமல், ரோட்டின் ஓரத்தில் குப்பை போன்று கிடப்பில் போட்டுள்ளனர். மேலும், இந்த மின் கம்பத்தின் மீது புதர்கள் படர்ந்து, சேரும் சகதியுமாக காணப்படுகிறது.
மின்துறை அதிகாரிகள், துருப்பிடித்து கேட்பாரற்று கிடக்கும் மின்கம்பங்களை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.