/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நுாறு நாள் வேலை திட்டத்தில் ரூ.3 கோடி நிலுவை நுாறு நாள் வேலை திட்டத்தில் ரூ.3 கோடி நிலுவை
நுாறு நாள் வேலை திட்டத்தில் ரூ.3 கோடி நிலுவை
நுாறு நாள் வேலை திட்டத்தில் ரூ.3 கோடி நிலுவை
நுாறு நாள் வேலை திட்டத்தில் ரூ.3 கோடி நிலுவை
ADDED : ஜூன் 25, 2025 10:30 PM
அன்னுார்; 'நுாறு நாள் வேலை திட்டத்தில் ரூ.3 கோடி நிலுவை உள்ளது' என, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.
அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், சுய உதவிக் குழு கட்டடம், சமுதாய நலக்கூட கட்டடம், சிறு பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன.
இப்பணிகளில் 30 சதவீதம் தொழிலாளர்களின் சம்பளத்திற்கு செலவாகிறது. 70 சதவீதம் தொகை செங்கல், மணல், இரும்பு, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு செலவிடப்படுகிறது.
இந்நிலையில் ஒப்பந்ததாரர்கள் 100 நாள் வேலைத்திட்ட பணிகளுக்காக கட்டுமான பொருட்களை வழங்கினர். பணி முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் கட்டுமான பொருட்கள் வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு 3 கோடி ரூபாய் வரை அன்னுார் ஒன்றியத்தில் நிலுவை உள்ளது.
இதுகுறித்து அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கோவை மாவட்ட நிர்வாகத்திடம் மூன்று மாதங்களாக பலமுறை புகார் தெரிவித்தனர். எனினும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து முதல்வரின் தனிப் பிரிவு அலுவலகத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். விரைவில் கட்டுமான பொருட்களுக்கான தொகையை அரசு விடுவிக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.