ADDED : ஜூன் 25, 2025 10:29 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே வீட்டில் நகை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம், காமாட்சிபுரம், ஜெயவர்த்தனா நகரை சேர்ந்தவர் அஜித்குமார், 27; டிரைவர். வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார்.
இவரது மனைவி லோகநாயகி, கோவனூரில் உள்ள அவரது உறவினரை பார்க்க சென்று விட்டார். வீட்டின் கதவு அருகே ஜன்னல் மேல் சாவியை வைத்துவிட்டு சென்றனர். மாலை வந்து வீட்டை திறந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த பர்சு கீழே சிதறி கிடந்தது.
பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயின் மற்றும் அரை பவுன் தங்க கம்மல் ஆகியவை காணாமல் போய் இருந்தது. இது குறித்து அஜித்குமார், பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, சாமி செட்டி பாளையம் சின்ன கண்ணாபுதூரைச் சேர்ந்த தினேஷ், 34, கைது செய்து, நகையை மீட்டனர். கைது செய்யப்பட்ட தினேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.