Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விபத்துக்களை தவிர்க்க சாலை சீரமைப்பு பணிகள் தீவிரம்

விபத்துக்களை தவிர்க்க சாலை சீரமைப்பு பணிகள் தீவிரம்

விபத்துக்களை தவிர்க்க சாலை சீரமைப்பு பணிகள் தீவிரம்

விபத்துக்களை தவிர்க்க சாலை சீரமைப்பு பணிகள் தீவிரம்

ADDED : செப் 09, 2025 10:24 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் முதல் பர்லியாறு வரை உள்ள சாலையில் விபத்துக்களை தவிர்க்க சீரமைப்பு பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருவோர், வெளியூர்களில் இருந்து வேலை நிமித்தமாக வருவோர், ஊட்டி சாலை, அன்னுார் உள்ளிட்ட பல்வேறு சாலைகளைபயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலைகளில் தேசிய நெடுஞ்சாலை துறைக்குட்பட்ட கோவை - - மேட்டுப்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் -- ஊட்டி சாலையை விரிவாக்கம் செய்ய அண்மையில் சர்வே பணிகள் நடைபெற்றன. மேலும், மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் நான்கு வழிச்சாலையும், ஐந்து முக்கு பகுதியில் ரவுண்டான அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே தற்போது இச்சாலைகளில் உள்ள பள்ளங்களில் பேட்ச் ஓர்க் செய்தும், சாலையோரம் உள்ள புற்கள், செடிகள் போன்றவை அகற்றியும் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ' மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் உள்ள சி.டி.சி., டிப்போ முதல் ஊட்டி சாலையில் உள்ள தனியார் தீம் பார்க் வரை சுமார் 10 கி.மீ தூரத்திற்கும் மேல் நான்கு வழிச்சாலை அமைக்க திட்ட மதிப்பீடு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

பேட்ச் ஒர்க் செய்யப்படுவதால், விபத்து அபாயம் குறைந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பையும், நல்லதொரு பயணத்தையும் கருதி சாலை சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.----





      Our Apps Available On




      Dinamalar

      Follow us