/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீடு வீடாக அழைப்பிதழ்; அ.தி.மு.க.,வினர் விநியோகம் வீடு வீடாக அழைப்பிதழ்; அ.தி.மு.க.,வினர் விநியோகம்
வீடு வீடாக அழைப்பிதழ்; அ.தி.மு.க.,வினர் விநியோகம்
வீடு வீடாக அழைப்பிதழ்; அ.தி.மு.க.,வினர் விநியோகம்
வீடு வீடாக அழைப்பிதழ்; அ.தி.மு.க.,வினர் விநியோகம்
ADDED : செப் 09, 2025 10:23 PM
அன்னுார்; முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பங்கேற்கும் கூட்டத்திற்கு வருகை தரக் கோரி அ.தி.மு.க., வினர் வீடு, வீடாக, அழைப்பிதழ் விநியோகித்தனர்.
முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான பழனிச்சாமி தமிழகம் முழுவதும் எழுச்சி பயணம் என்னும் பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி தொகுதியில் வருகிற 13ம் தேதி இரவு பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த பிரச்சாரக்கூட்டத்தில் 50,000 பேர் பங்கேற்கச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அன்னுாரில் வீடு, வீடாக, அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்தது. கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், சாய் செந்தில் மற்றும் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கினர்.
அன்னுார் ஒன்றியத்திலிருந்து அவிநாசி கூட்டத்தில் அதிக அளவில் பங்கேற்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.