/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலை விரிவாக்க பணியால் குழாய்கள் உடைப்பு; 20 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் சாலை விரிவாக்க பணியால் குழாய்கள் உடைப்பு; 20 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சாலை விரிவாக்க பணியால் குழாய்கள் உடைப்பு; 20 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சாலை விரிவாக்க பணியால் குழாய்கள் உடைப்பு; 20 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சாலை விரிவாக்க பணியால் குழாய்கள் உடைப்பு; 20 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
ADDED : ஜூன் 11, 2025 09:04 PM

அன்னுார்; குழாய்கள் தாறுமாறாக உடைக்கப்பட்டதால், 20 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
அவிநாசியில் இருந்து கருவலூர், அன்னுார், பொகலூர் வழியாக, மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, 238 கோடி ரூபாய் செலவில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குருக்கிளையம்பாளையம், மேகிணறு பிரிவு ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. மரங்களை தோண்டி அகற்றும் போது குடிநீர் குழாய்கள் தாறுமாறாக உடைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஒட்டர்பாளையம் ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், 'குடிநீர் குழாய்களை முன்னதாகவே தோண்டி எடுத்து மாற்று ஏற்பாடு செய்த பிறகே மரங்களை தோண்டி அகற்ற வேண்டும். ஆனால் அந்த ஏற்பாடு எதுவும் செய்யாமல் கண்மூடித்தனமாக மரங்களை தோண்டி எடுக்கின்றனர். இதனால் குடிநீர் கொண்டு செல்லும் கிளை குழாய்கள் அனைத்துமே உடைந்து விட்டன. மீண்டும் இந்த குழாய்களை அருகில் தள்ளி பதிக்க பொக்லைன் இயந்திரம் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.
குருக்கிளையம்பாளையம், நல்லி செட்டிபாளையம், மே கிணறு, மங்கா பாளையம், ஆயிமா புதூர், ஒட்டர்பாளையம் உள்ளிட்ட 20 கிராமங்களில் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.
சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் குழாய், கேபிள் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படாமல் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். மேலும் குடிநீர் குழாய் சீரமைப்புக்கு அவசர நிதி ஒதுக்க வேண்டும்,' என்றனர்.