/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காந்தவயல் சாலையில் வாகனம் ஓட்டுவது 'ரிஸ்க்'; தடுமாறினால் ஆற்றில் விழ வேண்டியது தான் காந்தவயல் சாலையில் வாகனம் ஓட்டுவது 'ரிஸ்க்'; தடுமாறினால் ஆற்றில் விழ வேண்டியது தான்
காந்தவயல் சாலையில் வாகனம் ஓட்டுவது 'ரிஸ்க்'; தடுமாறினால் ஆற்றில் விழ வேண்டியது தான்
காந்தவயல் சாலையில் வாகனம் ஓட்டுவது 'ரிஸ்க்'; தடுமாறினால் ஆற்றில் விழ வேண்டியது தான்
காந்தவயல் சாலையில் வாகனம் ஓட்டுவது 'ரிஸ்க்'; தடுமாறினால் ஆற்றில் விழ வேண்டியது தான்
ADDED : ஜூன் 11, 2025 09:04 PM

மேட்டுப்பாளையம்; காந்தவயல் சாலையில் வாகனம் ஓட்டுவது 'ரிஸ்க்' தான். ஏனென்றால் கொஞ்சம் தடுமாறினால் வாகனத்தோடு ஆற்றில் விழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட லிங்காபுரம் அருகே, காந்தையாறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடந்து காந்தவயல், மொக்கை மேடு, காந்தையூர், உளியூர், ஆலூர் ஆகிய மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு மக்களும், விவசாயிகளும் சென்று வருகின்றனர். காந்தையாற்றில் பாலம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருப்பதால், பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆற்றின் குறுக்கே தற்போது உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பாலம் கட்டுமான பணிகள் பாதிப்பு அடைந்தன. ஆற்றின் குறுக்கே காந்தவயலுக்கு செல்லும் சாலை உள்ளது. ஆற்று தண்ணீரின் அலைகளால், கரையின் இரு பக்கம் அரிப்பு ஏற்பட்டு மண் சரிந்து விழுந்துள்ளது. இரண்டு வாகனங்கள் செல்லும் அளவில் இருந்த சாலை, மண் அரிப்பால் தற்போது ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு, சிறிய அளவில் உள்ளது.
இதுகுறித்து காந்தவயல் மலைவாழ் மக்கள் மற்றும் லிங்காபுரம் விவசாயிகள் கூறியதாவது: விவசாய விளைபொருட்களை வாகனங்களில், காந்தவயல் சாலை வழியாக எடுத்து வரும் பொழுது, எதிரே இருசக்கர வாகனங்கள் வந்தால், ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லாத அளவில் தற்போது சாலை உள்ளது. ஓரமாக வாகனங்களை இயக்கினால் சரிந்து ஆற்றில் விழும் நிலை ஏற்படுகிறது.
இரண்டு முறை இது மாதிரியான விபத்துகள் ஏற்பட்டுள்ளன. பாலம் அகலமாக கட்டி, சாலை சிறியதாக இருந்தால், உயர்மட்ட பாலம் கட்டியும், மக்களுக்கு பயனில்லாமல் போகும். எனவே, மலைவாழ் மக்கள், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகமும், சாலையின் இரு பக்கம் மண் கொட்டி, சாலையை அகலப்படுத்த வேண்டும். இவ்வாறு மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கூறினர்.