/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பையாகும் பறிமுதல் வாகனங்கள்; இடமாற்றம் செய்ய கோரிக்கை குப்பையாகும் பறிமுதல் வாகனங்கள்; இடமாற்றம் செய்ய கோரிக்கை
குப்பையாகும் பறிமுதல் வாகனங்கள்; இடமாற்றம் செய்ய கோரிக்கை
குப்பையாகும் பறிமுதல் வாகனங்கள்; இடமாற்றம் செய்ய கோரிக்கை
குப்பையாகும் பறிமுதல் வாகனங்கள்; இடமாற்றம் செய்ய கோரிக்கை
ADDED : செப் 10, 2025 09:38 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், புதர்மண்டி கிடப்பதால், அவற்றை இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
விபத்து, கொலை, கொள்ளை, கடத்தல், வழிப்பறி, திருட்டு உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கோர்ட் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
அந்த வகையில், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, அரசு கலைக்கல்லுாரிச் சாலையில், அதிகப்படியான பறிமுதல் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணை முடிய குறைந்தபட்சம், 2 முதல் 5 ஆண்டுகள் ஆவதால், வாகனங்கள் அனைத்தும் உருக்குலைந்து காணப்படுகிறது. அவ்வாறு, வழக்கு முடிந்தாலும் உருக்குலைந்த வாகனங்களை எடுத்துச் செல்ல உரிமையாளர்கள் எவரும் விரும்புவதில்லை.
மொத்தமாக, ஏலத்தில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயை அரசு கருவூலக் கணக்கில் சேர்க்க வேண்டும். தற்போது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் புதர்மண்டி காணப்படுகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது: பறிமுதல் செய்யப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில், பேட்டரி, முகப்பு விளக்குகள், டயர் என, பல பாகங்கள் மாயமாகி விட்டன. சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் இடம் இல்லையெனில், காவல்துறைக்கு சொந்தமான ஏதேனும் ஒரு இடத்திற்கு வாகனங்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.
சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு புதர் மண்டி கிடப்பதால், அச்சுறுத்தலாக உள்ளது. முற்றிலும் சேதமான வாகனங்களை ஏலம் விடும்போது, மெக்கானிக்குகள் வாங்கிச் சென்று உதிரி பாகங்களாக விற்கலாம்.
இவ்வாறு, கூறினர்.