/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்லுாரிகளுக்கு இடையே போட்டி; எஸ்.டி.சி. மாணவர்கள் வெற்றி கல்லுாரிகளுக்கு இடையே போட்டி; எஸ்.டி.சி. மாணவர்கள் வெற்றி
கல்லுாரிகளுக்கு இடையே போட்டி; எஸ்.டி.சி. மாணவர்கள் வெற்றி
கல்லுாரிகளுக்கு இடையே போட்டி; எஸ்.டி.சி. மாணவர்கள் வெற்றி
கல்லுாரிகளுக்கு இடையே போட்டி; எஸ்.டி.சி. மாணவர்கள் வெற்றி
ADDED : செப் 10, 2025 09:38 PM
பொள்ளாச்சி; பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான சதுரங்கம், கிராஸ்கன்ரி போட்டிகளில் எஸ்.டி.சி. மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டிகள், கோவை காரமடை ஆர்.வி. கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்றன. இதில், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர்கள் மணீஷ், மோகன்குமார், திலீப்ரோஜர் பின்னி, அனுதேவ், புவனேஸ்வரன், மணிகண்டன் அடங்கிய குழுவினர், இரண்டாமிடத்தை கைப்பற்றினர்.
கோபி கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த பாரதியார் பல்கலை கிராஸ்கன்ரி என்று அழைக்கப்படும், 10 கி.மீ. துாரம் கொண்ட சாலை ஓட்டப்போட்டி நடந்தது. இதில், பங்கேற்ற பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர்கள் கனிராஜா, பூபாலன், சபரீஸ்வரன், மதேஸ்பெவின்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர், மூன்றாமிடத்தை கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி தலைவர் வெங்கடேஷ், துணை தலைவர் விஜயமோகன், செயலர் சேதுபதி, முதல்வர் வனிதா மணி, உடற்கல்வித்துறை இயக்குனர் பாரதி உள்ளிட்டோர் பாராட்டினர்.