/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டை சீரமைக்க தயக்கம்; பரிதவிக்கும் தொழிலாளர்கள் ரோட்டை சீரமைக்க தயக்கம்; பரிதவிக்கும் தொழிலாளர்கள்
ரோட்டை சீரமைக்க தயக்கம்; பரிதவிக்கும் தொழிலாளர்கள்
ரோட்டை சீரமைக்க தயக்கம்; பரிதவிக்கும் தொழிலாளர்கள்
ரோட்டை சீரமைக்க தயக்கம்; பரிதவிக்கும் தொழிலாளர்கள்
ADDED : செப் 10, 2025 09:45 PM

வால்பாறை,;ஈட்டியார் எஸ்டேட் ரோட்டை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவதால், தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
வால்பாறை நகரில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஈட்டியார் எஸ்டேட். இங்குள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது, மாடசாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியின் போது, பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
இந்நிலையில், ஈட்டியார் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் ரோடு, கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. கரடு, முரடாக உள்ள இந்த ரோட்டில் ஆம்புலன்ஸ் கூட சென்று வர முடியாத நிலையில், தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது: வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த ஈட்டியார் எஸ்டேட் பகுதியில், ஒரு கி.மீ., துாரம் உள்ள ரோட்டை சீரமைக்க பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எந்த அதிகாரிகளும், எங்கள் பிரச்னையை கண்டு கொள்வதில்லை.
வால்பாறையில் உள்ள பல்வேறு தனியார் எஸ்டேட் ரோடுகள், நகராட்சி சார்பில் புதுப்பிக்கப்படுகிறது. ஆனால், வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட ஈட்டியார் எஸ்டேட் ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக ரோட்டை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.