/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கவித்திறனை துாண்டும் அறிவுச்சோலை மையம்; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கவித்திறனை துாண்டும் அறிவுச்சோலை மையம்; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
கவித்திறனை துாண்டும் அறிவுச்சோலை மையம்; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
கவித்திறனை துாண்டும் அறிவுச்சோலை மையம்; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
கவித்திறனை துாண்டும் அறிவுச்சோலை மையம்; வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : செப் 10, 2025 09:42 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அறிவுச்சோலை விழிப்புணர்வு மையத்தின் சார்பில், 'தேன் மிட்டாய்' சிறார் இதழ் வெளியீட்டு விழா நடந்தது.
பொள்ளாச்சி, பில்சின்னாம்பாளையம் அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையம்சார்பில், சிறுவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், அவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், 'தேன் மிட்டாய்' எனும் சிறார் இதழ் வெளியீட்டு விழா, சிறார் இலக்கிய விழாவாக பில்சின்னாம்பாளையத்தில் நடந்தது.
அமைப்பின் நிறுவனர் அம்சப்ரியா தலைமை வகித்தார். 'தேன் மிட்டாய்' இணை ஆசிரியர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். அமைப்பாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதழினை, கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் வெளியிட்டார். சிறுவர்கள் பெற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில், இதழுக்குத் 'தேன் மிட்டாய்' என்ற பெயர் சூட்டிய சிறுமிதக் ஷ்ணாவுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், சிறார் எழுத்தாளர்கள் பாலமுருகன் எழுதிய, 'சரின்னு சொல்லுங்க அப்பா' என்ற குறுநாவல், எழுத்தாளர் ராமச்சந்திரன் சின்னராஜ் எழுதிய 'மழை வருது' என்ற சிறார் பாடல் நுாலும், விஜயன் எழுதிய 'க்யூன்ஸ் இங்கிலீஷ்' என்ற நுாலும் வெளியிடப்பட்டது.
கம்பன் கலை மன்ற தலைவர் சண்முகம், கவிஞர்கள் வெள்ளியங்கிரி, சோமனூர் செந்திரு, அன்றிலன், எழுத்தாளர் சந்திரசேகரன் ஆகியோர் நுால்களை வெளியிட்டனர்.
'நமது திறமை நமது மேடை' என்ற தலைப்பில் கீழ் மாணவர்கள் தங்களின் திறன்களை அரங்கேற்றினர். வாசித்தால் பரிசு என்ற தலைப்பில் கவிஞர் காளிமுத்து பேசினார். அமைப்பின் நோக்கங்கள், செயல்பாடுகள், மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அமைப்பாளர் ராமலிங்கமும் பேசினர்.
'திருக்குறளும் வாழ்வும்' என்ற தலைப்பில் காளிங்கராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் வெள்ளிங்கிரி பேசினர்.மாணவர்களுக்கு, கலை இலக்கியம், விளையாட்டு ஆகிய போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாறுவேடப் போட்டி, கலை நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.