/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலை வியாபாரிகளுக்கு கடனுதவி மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு சாலை வியாபாரிகளுக்கு கடனுதவி மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு
சாலை வியாபாரிகளுக்கு கடனுதவி மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு
சாலை வியாபாரிகளுக்கு கடனுதவி மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு
சாலை வியாபாரிகளுக்கு கடனுதவி மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு
ADDED : மே 10, 2025 01:12 AM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகராட்சியில், சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் முகாமை, நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் ராஜாராம், பணிகளை ஆய்வு செய்தார்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு, கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை,சேசம்ருதி என்ற திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்க்கை நிலை உயர்ந்துள்ளதா என்பதை, அதில் பதிவு செய்யும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த முகாமை திருப்பூர் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் ராஜாராம் ஆய்வு செய்தார்.
மேலும், மேட்டுப்பாளையம் நகராட்சி நுாலகம் மற்றும் அறிவு சார் மையம், அண்ணாஜி ராவ் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாளங்காடி கட்டடம், மார்க்கெட் பகுதியில் கட்டப்பட்டு வரும் மீன் சந்தை கட்டடம், பஸ் ஸ்டாண்ட் கடைகள் கட்டுமான பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மண்டல பொறியாளர் சேர்மக்கனி, நகராட்சி கமிஷனர் அமுதா, பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர் மனோகரன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.


