ADDED : மே 10, 2025 01:14 AM
பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே உள்ள கல்லறை தோட்டத்தில் இருந்த சந்தன மரங்கள் வெட்டி கடத்தி செல்லப்பட்டன.
துடியலுார் என்.ஜி.ஜி.ஓ.,காலனி அருகே கல்லறை தோட்டம் உள்ளது. இங்கு சந்தன மரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள், செடி, கொடிகள் புதர் போல வளர்ந்து கிடக்கின்றன.
நேற்று முன்தினம் இங்கு உள்ள இரண்டு சந்தன மரங்களை சிலர் வெட்டி எடுத்து சென்று விட்டனர். நன்கு வளர்ந்த அடி மரத்தை வெட்டி எடுத்துவிட்டு, சிறிய துண்டுகளை அப்பகுதியிலேயே போட்டுவிட்டு சென்று விட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள், கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.


