Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அய்யப்ப பக்தருக்கு அன்னதானம் மறுப்பு சமூக வலைதளங்களில் வீடியோ பரவல் சமூக வலைதளங்களில் வீடியோ பரவல்

அய்யப்ப பக்தருக்கு அன்னதானம் மறுப்பு சமூக வலைதளங்களில் வீடியோ பரவல் சமூக வலைதளங்களில் வீடியோ பரவல்

அய்யப்ப பக்தருக்கு அன்னதானம் மறுப்பு சமூக வலைதளங்களில் வீடியோ பரவல் சமூக வலைதளங்களில் வீடியோ பரவல்

அய்யப்ப பக்தருக்கு அன்னதானம் மறுப்பு சமூக வலைதளங்களில் வீடியோ பரவல் சமூக வலைதளங்களில் வீடியோ பரவல்

ADDED : ஜன 04, 2024 09:04 PM

Google News
கோவை:கோவை சத்தி சாலை சரவணம்பட்டியை அடுத்த, கரட்டுமேட்டில் ரத்தினகிரி மருதாசல கோவில் அமைந்துள்ளது.

தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்தக் கோவிலில் அரசின் சார்பில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கடந்த டிச. 31ல் அய்யப்ப பக்தர் ஒருவர், தன் குழந்தையுடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அன்னதானம் சாப்பிட்டார். மறுமுறை உணவு கேட்டபோது ஊழியர்கள் மறுத்து விட்டனர்.

இந்தக் காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அது வேகமாக பரவி வருகிறது.

இது தொடர்பாக, கோவில் செயல் அலுவலர் ராஜேஷ் கூறியதாவது:

இந்த விவகாரம் குறித்து இரண்டு நாட்களில் விளக்கம் அளிக்குமாறு பெண் பணியாளர் பாக்கியலட்சுமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விளக்கத்தில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us