Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அமர்நாத் யாத்திரை துவங்கியது; ஹர, ஹர மஹாதேவா கோஷத்துடன் புறப்பட்டனர் பக்தர்கள்

அமர்நாத் யாத்திரை துவங்கியது; ஹர, ஹர மஹாதேவா கோஷத்துடன் புறப்பட்டனர் பக்தர்கள்

அமர்நாத் யாத்திரை துவங்கியது; ஹர, ஹர மஹாதேவா கோஷத்துடன் புறப்பட்டனர் பக்தர்கள்

அமர்நாத் யாத்திரை துவங்கியது; ஹர, ஹர மஹாதேவா கோஷத்துடன் புறப்பட்டனர் பக்தர்கள்

UPDATED : ஜூலை 03, 2025 11:46 AMADDED : ஜூலை 03, 2025 10:48 AM


Google News
Latest Tamil News
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புனித அமர்நாத் பனிலிங்க குகை ஜம்மு காஷ்மீரில் கடல் மட்டத்திலிருந்து 12,756 அடி உயரத்தில் உள்ளது. புனித குகையை அடைய 2 பாதைகள் உள்ளன. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்பர். இந்த அமர்நாத் யாத்திரையில் பங்கேற்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்துள்ளனர்.

பால்டால் மற்றும் பஹல்காமில் இருந்து பக்தர்கள் குழு ஒன்று புனித குகைக்குப் புறப்பட்டு சென்றனர். முதல் அணியில் சுமார் 4,500 பக்தர்கள் ஜம்முவிலிருந்து புறப்பட்டனர். ஹர, ஹர மஹாதேவா கோஷத்துடன் யாத்திரை துவங்கியது. பக்தர்கள் விரைவில் புனித அமர்நாத் குகைக்கு சென்று தரிசிப்பர் .

இந்த ஆண்டு 38 நாட்கள் நீடிக்கும் அமர்நாத் யாத்திரை, ஆகஸ்ட் 9 சனிக்கிழமை, சவான் பூர்ணிமா நாளில் நிறைவடையும்.


24 மணி நேரமும் பாதுகாப்பு


பாதுகாப்புக்காக 80 ஆயிரம் வீரர்கள் 24 மணி நேரமும் உஷார் நிலையில் உள்ளனர். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமர்நாத் யாத்திரைப் பாதையில் ஒவ்வொரு அடிக்கும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us