/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'வாசித்தால் மட்டுமே மூளை சுறுசுறுப்பாகும்''வாசித்தால் மட்டுமே மூளை சுறுசுறுப்பாகும்'
'வாசித்தால் மட்டுமே மூளை சுறுசுறுப்பாகும்'
'வாசித்தால் மட்டுமே மூளை சுறுசுறுப்பாகும்'
'வாசித்தால் மட்டுமே மூளை சுறுசுறுப்பாகும்'
ADDED : ஜன 08, 2024 01:39 AM

கோவை;கல்வி, கலை வடிவங்களின் நுணுக்கங்களை பள்ளி மாணவர்கள் அறியும் வகையில், வல்லுநர்கள் பங்கேற்கும் பயிற்சி பட்டறை, கருத்தரங்கு நிகழ்ச்சிகள், லிட் டேல் என்ற பெயரில், பிரக்ரியா இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.
தி வேதாந்தா டாட் காம் சார்பில், நடந்த இந்நிகழ்வில் 200க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், பெங்களூரு வித்யாஷேத்ரா குருகுலம் தலைவர் முனீத் திமான் பேசுகையில், ''நாம் இன்று வீடியோ பதிவுகளை, ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டே பார்க்கிறோம். ஆனால், புத்தகம் வாசிக்கும் போது, முதல் வரியின் அர்த்தம் புரியாமல், அடுத்தடுத்த வரிகளை படிக்க முடியாது. ஆக, மூளையை சுறுசுறுப்பாக்கி, படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள, புத்தக வாசிப்பு தான் கைக்கொடுக்கும்,'' என்றார்.