குடும்பத்தகராறில் மருமகனை சுட்டுக்கொன்ற மாஜி போலீஸ் அதிகாரி கைது
குடும்பத்தகராறில் மருமகனை சுட்டுக்கொன்ற மாஜி போலீஸ் அதிகாரி கைது
குடும்பத்தகராறில் மருமகனை சுட்டுக்கொன்ற மாஜி போலீஸ் அதிகாரி கைது
ADDED : ஆக 03, 2024 07:28 PM

சண்டிகர்: பஞ்சாப்பில் குடும்ப தகராறில் மருமகனை கோர்ட் வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாஜி போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப்பின் சண்டிகரை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி மல்வீந்தர்சிங், இவர் தன் மகளை டில்லியைச் சேர்ந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஹர்ப்ரீத்சிங் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.கடந்த சில ஆண்டுகளாக மகள் - மருமகன் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு விவகாரத்து வழக்கு வரை சென்றது. இன்று சண்டிகார் மாவட்ட கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பிலும் சமரசம் ஏற்படாததால், ஆத்திரமடைந்த மல்வீந்தர்சிங், தன் மகளின் கணவர் (மருமகன்) என்றும் பாராமல் ஹர்ப்ரீத்சிங்கை துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே மருமகன் ஹர்ப்ரீத்சிங் உயிரிழந்தார். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மல்வீந்த்சிங்கை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.