வாய், கால்களை கட்டி, மூட்டையில் திணித்து… மனசாட்சியை உலுக்கும் ம.பி., கொடூரம்
வாய், கால்களை கட்டி, மூட்டையில் திணித்து… மனசாட்சியை உலுக்கும் ம.பி., கொடூரம்
வாய், கால்களை கட்டி, மூட்டையில் திணித்து… மனசாட்சியை உலுக்கும் ம.பி., கொடூரம்

மக்களுக்கு சந்தேகம்
தலைநகர் போபாலின் கிழக்குப் பகுதியில் இருந்து 500 கி.மீ., தொலைவில் உள்ள சத்னா பகுதியில் இ-ரிக்சாவில் மூட்டைகளை எடுத்துச் சென்ற நபர்கள் மீது அப்பகுதி மக்களுக்கு திடீர் சந்தேகம் எழுந்தது. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
சாக்குப்பையில் நாய்கள்
அப்போது, 10க்கும் மேற்பட்ட நாய்களின் கால்கள் மற்றும் வாயை கயிறு மூலம் கட்டியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். நாய்களை மூட்டையில் கட்டி ஆற்றில் வீசச் செல்வதாகவும் கூறியுள்ளனர். ஆத்திரமடைந்த மக்கள், நாய்களை விடுவித்ததுடன், போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
வழக்குப்பதிவு
ஆனால், போலீசார் வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், நாய்களை சாக்குப் பையில் எடுத்து வந்த நபர்கள் கோத்வலி பகுதியைச் நந்து பசோர், பிரதீப் பசோர் என்பது தெரிய வந்தது. என்ன காரணத்தால் இப்படி செய்தனர், நாய்க்கறி போட திட்டமிட்டு, மாட்டிக்கொண்டதும், ஆற்றில் வீசப்போகிறோம் என்று கூறினார்களா என விசாரணை முழு வீச்சில் நடக்கிறது.