பேக்கரி இடித்து தரைமட்டம்: காரணம் தெரிஞ்சா நீங்களும் கொந்தளிப்பீங்க!
பேக்கரி இடித்து தரைமட்டம்: காரணம் தெரிஞ்சா நீங்களும் கொந்தளிப்பீங்க!
பேக்கரி இடித்து தரைமட்டம்: காரணம் தெரிஞ்சா நீங்களும் கொந்தளிப்பீங்க!
ADDED : ஆக 03, 2024 05:26 PM

லக்னோ: அயோத்தியில் 12 வயது சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரின் பேக்கரியை அரசு இடித்து தரைமட்டமாக்கியது.
உ.பி., மாநிலம் அயோத்தியை சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மொய்கான், ராஜூகான் ஆகிய இருவர் மீது சிறுமியின் தாய் ஜூலை 30ம் தேதி புரலாந்தர் போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்திற்கு சென்றது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் முதல்வரை சந்தித்த நிலையில், அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். முக்கிய குற்றவாளியான, மொய்த் கானின் பேக்கரியை அயோத்தி மாவட்ட நிர்வாகம் புல்டோசர் மூலம் இடித்தது. மொய்த் கான் சமாஜ்வாதி கட்சி நிர்வாகி என முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டசபையில் பேசுகையில் தெரிவித்தார்.
தண்டனை
சமூகவலைதளத்தில், சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்தி, அதில் அரசியல் செய்யாமல், நீதி கிடைக்க பா.ஜ., அரசு வழிவகை செய்ய வேண்டும். குற்றவாளிக்கு முழு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
நிதியுதவி
ஆனால் டிஎன்ஏ சோதனைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையும் விட்டுவிடக்கூடாது. வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதற்குப் பதிலாக, சமாஜ்வாடி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சதியில் அரசு ஈடுபட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு உடனடியாக ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.