Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறந்த மாணவர்களாக நுால் வாசிப்பு அவசியம்!

சிறந்த மாணவர்களாக நுால் வாசிப்பு அவசியம்!

சிறந்த மாணவர்களாக நுால் வாசிப்பு அவசியம்!

சிறந்த மாணவர்களாக நுால் வாசிப்பு அவசியம்!

ADDED : செப் 17, 2025 08:57 PM


Google News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி ஜோதிநகர் படிகள் படிப்பகத்தில், 28வது நிகழ்வு நடந்தது. நிறுவனர் ஜெயக்குமார் வரவேற்று பேசுகையில், ''சிறந்த மாணவர்களாக வரவேண்டும் என்றால் பாட புத்தகங்களை தாண்டி, நிறைய நுால்களை வாசிக்க வேண்டும்,'' என்றார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் செயல்பாட்டாளர் (ஓய்வு) ராஜேந்திரன் பேசுகையில், ''வாய் பேசும் திறமையற்று, செவித்திறனற்ற ஹெலன் கில்லர், நோபல் பரிசு பெற்றார். அதற்கு அடிப்படையே வாசிப்பு தான்,'' என்றார்.

கவிஞர் ஜெயக்குமார் எழுதிய அம்மாவை அழகு பார்க்கலாம் என்ற நுாலை, சிறார் எழுத்தாளர் பூங்கொடி பாலமுருகன் அறிமுகப்படுத்தினார். கவிஞர் சோலைமாயவன் பேசினார். மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us