/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மஹாளய அமாவாசையில் பொதுமக்கள் திதி தர்ப்பணம் மஹாளய அமாவாசையில் பொதுமக்கள் திதி தர்ப்பணம்
மஹாளய அமாவாசையில் பொதுமக்கள் திதி தர்ப்பணம்
மஹாளய அமாவாசையில் பொதுமக்கள் திதி தர்ப்பணம்
மஹாளய அமாவாசையில் பொதுமக்கள் திதி தர்ப்பணம்
ADDED : செப் 21, 2025 11:22 PM
கோவை ; மஹாளய அமாவாசையான நேற்று, பேரூரில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யும் வைபவம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, மஹாளய அமாவாசையில் திதி செய்தால், பல தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடையும்.
பித்ருலோகத்தில் இருக்கும் நம் முன்னோர், பூமிக்கு வந்து மஹாளய பட்ச காலத்தில் 15 நாட்கள் நம்முடன் வசித்து, நாம் செய்யும் தர்ப்பணம், வழிபாடு, தானம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு, நமக்கும் நம்முடைய குடும்பத்துக்கும் ஆசி வழங்குவர் என்பது ஐதீகம். பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில், நேற்று எள்ளும் தண்ணீரும் கலந்து பிண்டத்தின் மீது விட்டு கரையச்செய்து, திதி தர்ப்பணம், சிரார்தம் செய்து முன்னோர்களை நினைத்து ஏராளமானோர் வழிபட்டனர்.