/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பக்கோரி தர்ணா கோவையில் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பக்கோரி தர்ணா
கோவையில் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பக்கோரி தர்ணா
கோவையில் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பக்கோரி தர்ணா
கோவையில் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பக்கோரி தர்ணா
ADDED : ஜூலை 01, 2025 10:47 PM

கோவை; தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள, மாவட்ட சுகாதார அலுவலகத்தில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் செல்வி தலைமை வகித்தார். போராட்டத்தில், கிராம சுகாதார செவிலியர் பயிற்சி முடித்து பணியமர்த்தப்படாமல் 2,500க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில், தற்காலிக பணியாளர்களைக் கொண்டு, துணை சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடுவது போன்ற பணிகளை மேற்கொள்ள அனுப்பியுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
40 சதவீதம் காலியாக உள்ள, துணை சுகாதார நிலைய பணியிடத்தை, பயிற்சி முடித்து மூன்று ஆண்டுகளாக பணியமர்த்தப்படாமல் உள்ள, கிராம சுகாதார செவிலியர் மாணவிகளை கொண்டு நிரப்பிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.