/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புதிய திட்டம் அறிமுகம் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புதிய திட்டம் அறிமுகம்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புதிய திட்டம் அறிமுகம்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புதிய திட்டம் அறிமுகம்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புதிய திட்டம் அறிமுகம்
ADDED : ஜூலை 01, 2025 10:47 PM

வடவள்ளி; வடவள்ளியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில், இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், புதுப்பிக்கப்பட்ட, எக்ஸ்ட்ரா ரிவார்ட்ஸ் பாயின்ட் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், பெட்ரோல் அல்லது டீசல், எஞ்சின் ஆயில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் வாங்கும் மதிப்பில், 75 ரூபாய்க்கு, 1 பாயின்ட் வீதம் வாடிக்கையாளர்களின் ரிவார்ட்ஸ் பாயின்ட் கணக்கில் புள்ளிகள் சேரும்.
இப்புள்ளிகளை பயன்படுத்தி, அதன் மதிப்பிற்கு, வாடிக்கையாளர்கள் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் குகளில் பெட்ரோல், டீசல் அல்லது எஞ்சின் ஆயில் போன்றவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தவும், டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும், 'எக்ஸ்ட்ரா ரிவார்ட்ஸ் பாயின்ட்' என்ற புதுப்பிக்கப்பட்ட திட்ட அறிமுக விழா, வடவள்ளியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில் நேற்று நடந்தது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின், கோவை பிராந்திய தலைவர் சதீஷ்குமார் திட்டத்தை துவக்கி வைத்தார். இதில், இந்தியன் ஆயில் மேலாளர் சுமித் போஸ்லெஸ், கள அலுவலர் விஷ்ணு, வடவள்ளி இந்தியன் ஆயில் டீலர், ராஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.