/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
ADDED : ஜன 25, 2024 06:33 AM
கோவை : இடையர்பாளையத்தில் துாய்மை பணியாளர்கள், 25 பேருக்கு சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கோவை மாநகராட்சியில் நிரந்தர துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட, 2,220 பேருக்கு சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்களுக்கு காக்கி பேன்ட்ஸ், சர்ட், காலணி மற்றும் பெண்களுக்கு சேலை, பிளவுஸ், காலணி, சோப்புகள் உள்ளிட்டவை, மண்டலம் தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்துடன், மழை கோட், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. மாநகராட்சி மேற்கு மண்டலம், 35வது வார்டு சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில், 25 துாய்மை பணியாளர்களுக்கு, வார்டு கவுன்சிலர் சம்பத் சீருடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்.