/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/லஞ்சம் வாங்குவோரை பிடித்த எஸ்.ஐ.,க்கு ஜனாதிபதி பதக்கம்லஞ்சம் வாங்குவோரை பிடித்த எஸ்.ஐ.,க்கு ஜனாதிபதி பதக்கம்
லஞ்சம் வாங்குவோரை பிடித்த எஸ்.ஐ.,க்கு ஜனாதிபதி பதக்கம்
லஞ்சம் வாங்குவோரை பிடித்த எஸ்.ஐ.,க்கு ஜனாதிபதி பதக்கம்
லஞ்சம் வாங்குவோரை பிடித்த எஸ்.ஐ.,க்கு ஜனாதிபதி பதக்கம்
ADDED : ஜன 28, 2024 01:06 AM
பாலக்காடு:சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கத்தை, கேரள மாநிலம், பாலக்காடு விஜிலென்ஸ் எஸ்.ஐ., சுரேந்திரன் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொடுவாயூரை சேர்ந்த பாலன்-, தேவகி தம்பதியரின் மகன் சுரேந்திரன். இவர், கேரள மாநிலம், பாலக்காடு லஞ்ச ஒழிப்பு பிரிவில், சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரியும் இவர், சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் பெற்றுள்ளார்.
இவர், கடந்த மூன்று ஆண்டுகளில் மோட்டார் வாகனத் துறை, விலங்குகள் நலத்துறை சோதனைச் சாவடிகள், பாலக்கயம் வில்லேஜ் கள உதவியாளர் அலுவலகம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தி, லஞ்சம் வாங்கிய அதிகாரிகள், ஊழியர்களை கையும் களவுமாக பிடித்துள்ளார்.
ஜனாதிபதி பதக்கம் பெற்றது குறித்து, சப் - இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் கூறுகையில், ''12 டி.எஸ்.பி.,க்களுடன் பணிபுரிந்துள்ளேன். உயர் அதிகாரிகளின் ஊக்குவிப்பும், உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பே, லஞ்சம் பெறுவோரை கையும் களவுமாக பிடித்ததற்கு முக்கிய காரணமாகும்.
கடந்த, 2019ல் லஞ்ச ஒழிப்புத் துறையின் பேட்ஜ் ஆப் ஹானர் விருது கிடைத்தது. 2021ல் முதல்வரின் போலீஸ் பதக்கம் பெற்றேன். இப்போது, ஜனாதிபதி பதக்கம்கிடைத்துள்ளது,'' என்றார்.