/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் டோக்கன்பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் டோக்கன்
பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் டோக்கன்
பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் டோக்கன்
பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் டோக்கன்
ADDED : ஜன 07, 2024 02:22 AM
கோவை:'பொங்கல் பரிசு தொகுப்பு பெற, இன்று முதல் டோக்கன் வழங்கப்படும்' என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றுவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா குடும்ப அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் பரிசு தொகுப்பு 10ம் தேதி முதல் 14 வரை, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
பரிசு தொகுப்பு பெற, அனைத்து ரேஷன் கடைகளில், இன்று முதல் 9ம் தேதி வரை முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன்கடை விற்பனை முனைய இயந்திரத்தில், பயோமெட்ரிக் முறையில் வழங்கப்படும். பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட விபரம், குடும்ப அட்டைதாரரின் மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் பெற்றுக்கொள்ளலாம். குடும்ப உறுப்பினர் அல்லாத நபரிடம் பொங்கல் பரிசு தொகுப்பு, பணம் வழங்கப்பட மாட்டாது என, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.