Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி - பெங்களூருக்கு நேரடி ரயில் தேவை! பா.ஜ., சார்பில் ரயில்வே அமைச்சருக்கு மனு 

பொள்ளாச்சி - பெங்களூருக்கு நேரடி ரயில் தேவை! பா.ஜ., சார்பில் ரயில்வே அமைச்சருக்கு மனு 

பொள்ளாச்சி - பெங்களூருக்கு நேரடி ரயில் தேவை! பா.ஜ., சார்பில் ரயில்வே அமைச்சருக்கு மனு 

பொள்ளாச்சி - பெங்களூருக்கு நேரடி ரயில் தேவை! பா.ஜ., சார்பில் ரயில்வே அமைச்சருக்கு மனு 

ADDED : ஜன 02, 2024 11:42 PM


Google News
பொள்ளாச்சி;'பொள்ளாச்சி - பெங்களூருக்கு நேரடி இரவு தினசரி ரயில் சேவை துவங்க வேண்டும்,' என நகர பா.ஜ., சார்பில், ரயில்வே துறை அமைச்சர் மற்றும் மத்திய இணை அமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷணவ், தென்னக ரயில்வே பொது மேலாளர், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் முருகன் ஆகியோருக்கு தபால் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக, பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் பரமகுரு மனு அனுப்பியுள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக பொள்ளாச்சி உள்ளது. பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் வால்பாறை தாலுகாக்களை சேர்ந்த பல லட்சம் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

பொள்ளாச்சி பகுதிகளில் ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் பெரிய உற்பத்தி, விவசாய பொருட்கள் சார்ந்த (காயர் உட்பட) நிறுவனங்கள் செயல்படுகின்றன.

ஆனைமலை மாசாணி அம்மன் கோவில், வால்பாறை மலைப்பகுதி, உடுமலையில் திருமூர்த்தி மலைக்கோவில், ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள் உள்ளன.

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான தனியார் நிறுவன ஊழியர்கள் (குறிப்பாக, தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர்கள்) பெங்களூரில் வேலை செய்கின்றனர். இதுபோன்று வர்த்தகர்கள், சுற்றுலா பயணியரும், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு செல்வதற்கும், பொள்ளாச்சியில் இருந்து பெங்களூரு செல்கின்றனர்.

மேலும், பெங்களூருவில் உள்ள கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், பொள்ளாச்சியில் இருந்து பஸ்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.

தற்போது, பொள்ளாச்சியில் இருந்து பெங்களூருக்கு நேரடி ரயில் இல்லை. அதுபோல, கோவையில் இருந்தும் பெங்களூருவுக்கு நேரடி இரவு நேர ரயில் இல்லை. எனவே, பொள்ளாச்சி மற்றும் கோவை பகுதி மக்களின் தேவைக்காக, பொள்ளாச்சியில் இருந்து கோவை, திருப்பூர், சேலம் வழியாக நேரடி இரவு நேர தினசரி ரயில் இயக்க வேண்டும்.

இந்த ரயில் பொள்ளாச்சியில் இருந்து, இரவு, 9:00 மணியில் இருந்து 11:00 மணிக்குள் கிளம்பும் படி ரயில் அட்டவணை இருக்க வேண்டும். அதுபோல மறுமார்கத்தில் பெங்களூருவில் இருந்து ரயில் கிளம்ப வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us