வயநாடு நிலச்சரிவு : அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்
வயநாடு நிலச்சரிவு : அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்
வயநாடு நிலச்சரிவு : அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்
ADDED : ஆக 02, 2024 07:58 PM

புதுடில்லி: கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும் என முன்பே எச்சரித்தோம் என பேசிய அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ராஜ்யசபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிலச்சரிவு குறித்து முன்கூட்டியே கேரளாவுக்கு எச்சரிக்கை விடுத்தோம்.
7 நாளுக்கு முன்பே , ஜூலை 23ல் மத்திய அரசு தகவல் அளித்தது. 24,25 ல் மீண்டும் எச்சரிக்கை விடுத்தோம். 27 ல் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் , நிலச்சரிவு ஏற்படும், மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை அளிக்கப்பட்டது. ஆனால் பினராயி விஜயன் அரசு அலட்சியமாக இருந்ததே உயிரிழப்புக்கு காரணம் என்றார்.
அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக பார்லிமென்ட்டில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.