/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வங்கதேசத்தவர்களிடம் போலீசார் விசாரணை - வங்கதேசத்தவர்களிடம் போலீசார் விசாரணை -
வங்கதேசத்தவர்களிடம் போலீசார் விசாரணை -
வங்கதேசத்தவர்களிடம் போலீசார் விசாரணை -
வங்கதேசத்தவர்களிடம் போலீசார் விசாரணை -
ADDED : ஜூன் 15, 2025 01:54 AM
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒரு பெண் உட்பட நான்கு வங்கதேசத்தவர்களிடம், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக நமது நாட்டுக்குள் நுழைந்து, போலி ஆவணங்களை காட்டி, கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களில் தங்கி, பணியாற்றி வருவது குறித்து, போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஒரு பெண் உட்பட நான்கு வங்கதேசத்தவர்கள் வேலை பார்த்து வருவதாக தகவல் கிடைத்தது. அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், போலி ஆதார் கார்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை வழங்கியவர் யார், எப்படி தயாரித்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.