/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உயிரிழந்த 'டிராபிக்' தாத்தா; போலீசார் அஞ்சலி உயிரிழந்த 'டிராபிக்' தாத்தா; போலீசார் அஞ்சலி
உயிரிழந்த 'டிராபிக்' தாத்தா; போலீசார் அஞ்சலி
உயிரிழந்த 'டிராபிக்' தாத்தா; போலீசார் அஞ்சலி
உயிரிழந்த 'டிராபிக்' தாத்தா; போலீசார் அஞ்சலி
ADDED : செப் 11, 2025 10:04 PM

கோவை; வாகனங்களில் செல்வோர் உக்கடத்தை கடக்கும்போது, அந்த பெரியவரை பார்க்காதவர்களே இருக்க மாட்டார்கள்.
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் முன் நின்றுகொண்டு, வாகன நெரிசல் ஏற்படும் சமயங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார்.
கோவையை சேர்ந்த சுல்தான், 88 என்கிற சமூக ஆர்வலரே அவர். பலரும் அவரை டிராபிக் தாத்தா என, அழைப்பது வாடிக்கை. உக்கடம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போலீசாருக்கு உதவுவார்.
வயது மூப்பு காரணமாக, நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
போக்குவரத்து போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் துடியலுாரில் அடக்கம் செய்யப்பட்டது.