/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பூச்சிக் கொல்லி நிறுவனத்தில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு பூச்சிக் கொல்லி நிறுவனத்தில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
பூச்சிக் கொல்லி நிறுவனத்தில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
பூச்சிக் கொல்லி நிறுவனத்தில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
பூச்சிக் கொல்லி நிறுவனத்தில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
ADDED : செப் 11, 2025 10:00 PM
கோவை; மதுக்கரையில் உள்ள தனியார் பூச்சிக்கொல்லி நிறுவனம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பூச்சிக்கொல்லி நிறுவனங்களில் ஒரே சமயத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் கலைச்செல்வி தலைமையிலான அதிகாரிகள் குழு, கோவை மற்றும் திண்டுக்கல் உதவி இயக்குனர்கள் தலைமையிலான குழு என, வெவ்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிறுவனத்தின் மூலக்கூறு மற்றும் உற்பத்திப் பதிவேடு, மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ், தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான அரசு பதிவு பெற்ற டாக்டரின் இசைவுக் கடிதம், பூச்சிக்கொல்லி மூலக்கூறை உற்பத்தி செய்ய, மூலக்கூறு உற்பத்தியாளரின் இசைவுக் கடிதம், வேதியியலாளர் விவரம், தொழிலாளர்களுக்கான மருத்துவ சிகிச்சை, சலுகைகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
பூச்சி மருந்து சட்டம் 1968 மற்றும் விதி 1971 ஆகியவை முறையாக பின்பற்றப்படாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.