/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு உறுதிமொழி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு உறுதிமொழி
ADDED : ஜூன் 14, 2025 11:30 PM

கோவை: குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
குழந்தைகள் கல்வி பெறுவது, ஒரு அடிப்படை உரிமை என்பதை எடுத்துரைக்கும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கோவையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும், மாணவர்கள் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
* பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், குழந்தை தொழிலாளர்கள்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், கல்லூரி முதல்வர் (பொ) திருநாவுக்கரசு தலைமையில், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.