/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் விக்கெட் மழையில் நனைந்த வீரர்கள் சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் விக்கெட் மழையில் நனைந்த வீரர்கள்
சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் விக்கெட் மழையில் நனைந்த வீரர்கள்
சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் விக்கெட் மழையில் நனைந்த வீரர்கள்
சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் விக்கெட் மழையில் நனைந்த வீரர்கள்
ADDED : ஜூன் 06, 2025 05:59 AM
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் போட்டி, ஸ்ரீ கிரிக்கெட் கிளப் மைதானம், பி.எஸ்.ஜி., -- ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகிறது.
ஆதித்யா கிரிக்கெட் கிளப் அணியும், ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆதித்யா அணியினர், 35.3 ஓவரில், 151 ரன்கள் எடுத்தனர். அணி வீரர் பிரணவ், 34 ரன்கள் எடுத்தார். எதிரணி வீரர் வாஞ்சிநாதன் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய ஜாலி ரோவர்ஸ் அணியினர், 28.2 ஓவரில், 153 ரன்கள் எடுத்தனர். அணி வீரர் நரேன் கார்த்திகேயன், 69 ரன்கள் எடுத்தார். மூன்றாவது டிவிஷன் போட்டியில் யங் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், ரெயின்போ கே.எம்.பி., கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
பேட்டிங் செய்த யங் பிரண்ட்ஸ் அணியினர், 30 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 92 ரன்கள் எடுத்தனர். எதிரணி வீரர்களான ராகவேந்திரகுமார் நான்கு விக்கெட்களும், பிரதீப் மூன்று விக்கெட்களும் வீழ்த்தினர்.
ரெயின்போ அணியினர், 24.1 ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து, 50 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் போட்டி நிறுத்தப்பட்ட நிலையில், 'ரன் ரேட்' அடிப்படையில், ரெயின்போ கே.எம்.பி., அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.