/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காந்தி சிலையை மறைத்து மீண்டும் பிளக்ஸ் பேனர் காந்தி சிலையை மறைத்து மீண்டும் பிளக்ஸ் பேனர்
காந்தி சிலையை மறைத்து மீண்டும் பிளக்ஸ் பேனர்
காந்தி சிலையை மறைத்து மீண்டும் பிளக்ஸ் பேனர்
காந்தி சிலையை மறைத்து மீண்டும் பிளக்ஸ் பேனர்
ADDED : செப் 21, 2025 10:57 PM

வால்பாறை; வால்பாறையில் காந்தி சிலையை மறைத்து மீண்டும் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
வால்பாறை காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படும் இந்தப்பகுதியில் காந்தி சிலை அமைந்துள்ளது.
சமீப காலமாக, மக்கள் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை காந்தி சிலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அதிகளவில் பிளக்ஸ் வைக்கின்றனர். குறிப்பாக, காந்தி சிலையை மறைத்து விதிமுறையை மீறி பல்வேறு அரசியல் கட்சியினர் பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர்.
இது தவிர திருமணம், காதணிவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கூட காந்திசிலையை மறைத்து பிளக்ஸ் பேனர் வைக்கின்றனர்.இதுபற்றி செய்தி வெளியிடும் போது, நகராட்சி, போலீசார் பிளக்ஸ்களை அகற்றுகின்றனர். ஆனால், பிளக்ஸ் வைப்பதை நிரந்தரமாக தடுக்க எவ்வித நடவடிக்கை எடுக்காததால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை காந்தி சிலை பஸ் ஸ்டாண்ட் மிகவும் குறுகலான இடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், காந்தி சிலையை மறைத்து பல்வேறு கட்சியினர் பிளக்ஸ் பேனர்கள் வைக்கின்றனர். விதிமுறையை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைப்பதை நிரந்தரமாக தடுக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.