ADDED : செப் 17, 2025 10:29 PM
தொண்டாமுத்துார்; மரம் தங்கசாமியின் நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில், காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் ஆண்டுதோறும் மரக்கன்று நடவு செய்யப்படுகிறது. இந்தாண்டு மரம் தங்கசாமியின் நினைவு நாளான நேற்று முன்தினம், காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள 67 விவசாய நிலங்களில், 434 ஏக்கர் நிலப்பரப்பில் 1,04,602 டிம்பர் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஈஷா யோக மையம் மற்றும் பேரூர் ஆதினம் இணைந்து செயல்படுத்தும், 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டத்தின்படி, 14 ஊராட்சிகளில், 114 அரச மரங்கள் நடப்பட்டன. விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.