/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சரியாக வேலை செய்கிறதா? வாகன காப்பகங்களில் கேமரா ஆய்வு செய்ய போலீசார் திட்டம் சரியாக வேலை செய்கிறதா? வாகன காப்பகங்களில் கேமரா ஆய்வு செய்ய போலீசார் திட்டம்
சரியாக வேலை செய்கிறதா? வாகன காப்பகங்களில் கேமரா ஆய்வு செய்ய போலீசார் திட்டம்
சரியாக வேலை செய்கிறதா? வாகன காப்பகங்களில் கேமரா ஆய்வு செய்ய போலீசார் திட்டம்
சரியாக வேலை செய்கிறதா? வாகன காப்பகங்களில் கேமரா ஆய்வு செய்ய போலீசார் திட்டம்
ADDED : செப் 17, 2025 10:28 PM

கோவை; கோவையில் உள்ள வாகன காப்பகங்களில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளனவா என்பதை, ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கோவையின் பல்வேறு இடங்களில் கட்டண வாகன காப்பகங்கள் செயல்படுகின்றன. இவற்றில், தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இரு சக்கர வாகனங்களை திருடுவோர், அவற்றை இதுபோன்ற காப்பகங்களில், நிறுத்தி செல்கின்றனர்.
சில நாட்கள் கழித்து திரும்பி வந்து, அவ்வாகனங்களை எடுத்துச் சென்று, விற்பனை செய்து விடுகின்றனர். வாகனங்கள் திருடு போனதாக புகார் வரும் சமயத்தில், காப்பகங்களுக்குச் சென்று போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
காப்பகங்களில் நிறுத்தப்படும் திருட்டு வாகனங்களை எளிதில் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டது. போலீசாரின் அறிவுரையை ஏற்று, காப்பகங்கள் பலவற்றில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
அவை நாளடைவில் காட்சிப் பொருளாக மாறி விட்டன. அவை செயல்பாட்டில் இருக்கின்றனவா என கண்காணிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'பல வாகன காப்பகங்களில் பொருத்தியுள்ள கேமராக்கள் முறையாக செயல்படுவதில்லை. கேமராக்களை முறையாக பராமரிக்கவும், செயல்படும் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
திருடப்படும் பைக்குளை நிறுத்திச் செல்லும் குற்றவாளிகள் அடையாளங்களை, எளிதில் கண்டறிய முடியும். கேமராக்கள் செயல்பாடு குறித்து விரைவில் ஆய்வு நடத்தப்படும்' என்றார்.