/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வண்ண மீன்களை கும்மிருட்டில் பார்க்க முடியாமல் மக்கள் தவிப்புவண்ண மீன்களை கும்மிருட்டில் பார்க்க முடியாமல் மக்கள் தவிப்பு
வண்ண மீன்களை கும்மிருட்டில் பார்க்க முடியாமல் மக்கள் தவிப்பு
வண்ண மீன்களை கும்மிருட்டில் பார்க்க முடியாமல் மக்கள் தவிப்பு
வண்ண மீன்களை கும்மிருட்டில் பார்க்க முடியாமல் மக்கள் தவிப்பு
ADDED : ஜன 01, 2024 12:25 AM

கோவை;வண்ண மீன் காட்சியகத்தில் இருள் படிந்திருந்ததால், கோவை வ.உ.சி., பூங்காவுக்கு வருவோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கோவை மாநகராட்சி வ.உ.சி., பூங்கா வளாகத்தில் வண்ண மீன் காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது; பார்வையாளர்களை கவரும் வகையில், தொட்டிகள் அமைக்கப்பட்டு, ஏராளமான வண்ண மீன்கள் விடப்பட்டு, அதன் வகைகள் குறித்து, விளக்கமும் வைக்கப்பட்டிருக்கிறது. மீன்வளத்துறை பராமரிக்கிறது. இதற்கென ஒரு ஊழியரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
வ.உ.சி., மைதானம் சுற்றுப்பகுதியில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நேற்று முன் தினம் மாலை மின் தடை செய்யப்பட்டிருந்தது. மீன் காட்சியகத்துக்கு யு.பி.எஸ்., வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை.
அதனால், இருளாக இருந்தது. அதனால், மொபைல் போனில், டார்ச் அடித்து, மீன்களை குழந்தைகளுக்கு பெற்றோர் காண்பித்தனர்.
தொட்டிகளில் வளர்க்கப்படும் சில வகை மீன்களுக்கு, 'ஏர் மோட்டார் மற்றும் பில்டர்' பயன்படுத்த வேண்டும். மின் சப்ளை இல்லாத காரணத்தால், அவ்வப்போது, குச்சியால் தொட்டியில் உள்ள தண்ணீரை, கலக்கி விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வு காண, வண்ண மீன் காட்சியகத்துக்கு யு.பி.எஸ்., வசதி செய்து கொடுக்க வேண்டும். இல்லையெனில், மீன்களின் உயிர்களுக்கு ஆபத்தாகி விடும்.
இவ்விஷயத்தில், மீன் வளத்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்பது, வ.உ.சி., பூங்காவுக்கு குழந்தைகளோடு வரும் பெற்றோரின் எதிர்பார்ப்பு.