/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொங்கல் பரிசு வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்! ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., பழுதுபொங்கல் பரிசு வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்! ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., பழுது
பொங்கல் பரிசு வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்! ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., பழுது
பொங்கல் பரிசு வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்! ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., பழுது
பொங்கல் பரிசு வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்! ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., பழுது
ADDED : ஜன 10, 2024 11:59 PM

கோவை : ரேஷன் கடைகளில் உள்ள பி.ஓ.எஸ்., கருவி (பாய்ன்ட் ஆப் சேல்ஸ் மெஷின்) வேலை செய்யாததால், பெரும்பாலான ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நேரத்தில், இவ்வாறு குளறுபடி நேர்வதால், ரேஷன்கடை ஊழியர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.
கோவை ரேஷன்கடைகளில், பி.ஓ.எஸ்., கருவி மூலம் ரேஷன் கார்டுதாரர்களில், கைரேகை பதிவு செய்யப்பட்ட பின், பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த கருவி, 2ஜி நெட் ஒர்க்கில் செயல்படுவதால், அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்பட்டு வேலை செய்வதில்லை. இதனால் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
நேற்று காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை, கோவையில் உள்ள பெரும்பாலான ரேஷன்கடைகளில், பி.ஓ.எஸ்., கருவி வேலை செய்யவில்லை. இதனால் பொருட்கள் வாங்க வந்த கார்டுதாரர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து, ரேஷன்கடை பணியாளர்கள் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக இந்த கருவி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கருவியை வழங்கிய நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டது. அதனால் இந்த கருவியை அவர்கள், சர்வீஸ் செய்து கொடுப்பதில்லை.
புதிய கருவி மாற்றி கொடுக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். எந்த நடவடிக்கையும் இல்லை. வாரத்தில் ஒருநாள் அல்லது இரண்டு நாள் இந்த பிரச்னை இருக்கிறது.
பொங்கல் தொகுப்பு கொடுக்கும் நேரத்தில், இந்த கருவி இயங்காமல் போய் விட்டால் பெரிய பிரச்னையாகி விடும். ஆகவே, அதிகாரிகள் இந்த கருவியை மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.