ADDED : செப் 10, 2025 10:21 PM
கோவை; கோவை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், பார்வையாளர் வாகன நிறுத்துமிடம் புதுப்பிக்கப்பட்டது.
கோவை தலைமை வருமான வரி கமிஷனர் அருண் பரத், புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை திறந்து வைத்தார். சக்தி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் தரணிபதி ராஜ்குமார், சண்முகம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கவுரவிக்கப்பட்டனர்.