/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பழங்குடியினர் பயன்பெற முகாம் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பழங்குடியினர் பயன்பெற முகாம்
தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பழங்குடியினர் பயன்பெற முகாம்
தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பழங்குடியினர் பயன்பெற முகாம்
தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பழங்குடியினர் பயன்பெற முகாம்
ADDED : செப் 10, 2025 10:20 PM

கோவை ; அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில், பழங்குடியின மக்களிடையே தொழில் முனைவு குறித்தும், சுய வேலை வாய்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட தொழில் மையம் வாயிலாக, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் முகாம் நடத்தப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக, பில்லுார் அருகே சின்ன மானுார் பழங்குடியின கிராமத்தில், நேற்று சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
மானியத்துடன் கடன் பெறுவதற்கான நடைமுறை, தொழில் திட்டங்கள், தொழில் துவங்குவதற்கான ஆயத்தங்கள், தொழில் நடத்தவும், மேம்படுத்தவும் உள்ள யுக்திகள் குறித்து, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா விளக்கினார்.
இருவர் மளிகை கடை வைக்கவும், ஒருவர் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனம் வாங்கவும், மூவர், மசாலா பொடி தயாரிக்கவும் விருப்பம் தெரிவித்தனர். உரிய ஆவணங்கள் சரிபார்த்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.