/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நமக்கு நாமே குடிநீர் திட்டம் விரைவில் துவங்கும் நமக்கு நாமே குடிநீர் திட்டம் விரைவில் துவங்கும்
நமக்கு நாமே குடிநீர் திட்டம் விரைவில் துவங்கும்
நமக்கு நாமே குடிநீர் திட்டம் விரைவில் துவங்கும்
நமக்கு நாமே குடிநீர் திட்டம் விரைவில் துவங்கும்
ADDED : ஜூன் 04, 2025 12:31 AM
மேட்டுப்பாளையம்:
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது சிக்கதாசம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
பவானி ஆறு அருகே ஓடியும், போதிய குடிநீர் கிடைக்காமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து முன்னாள் ஊராட்சி தலைவர் விமலா, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ஒரு கோடியே, 40 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளிப்பாளையம் குடிநீர் திட்டத்தை துவக்கினார்.
பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, அதை கரட்டு மேட்டில் சுத்தம் செய்து, மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டப் பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து ஊராட்சி அலுவலரிடம் கேட்டபோது, கரட்டுமேடு டேங்கில் இருந்து, நேஷனல் நகர் நில மட்ட தொட்டி வரை, குழாய் பதிக்க வேண்டி உள்ளது. அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் குழாய் பதித்து, தண்ணீர் பம்பிங் செய்யப்படும். முதலில், 20 ஹெச்.பி., மின்மோட்டார் மட்டுமே பம்பிங் செய்ய திட்டம் தயார் செய்யப்பட்டது. ஆனால் பொது மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, 60 ஹெச்.பி., மோட்டார் மாற்றப்பட்டுள்ளது.
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பொழுது நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். ஒரு மாதத்தில் இக்குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இவ்வாறு அலுவலர் கூறினார்.