/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புதிய சிறைச்சாலை வளாகம் அதிகாரி இன்று ஆய்வு புதிய சிறைச்சாலை வளாகம் அதிகாரி இன்று ஆய்வு
புதிய சிறைச்சாலை வளாகம் அதிகாரி இன்று ஆய்வு
புதிய சிறைச்சாலை வளாகம் அதிகாரி இன்று ஆய்வு
புதிய சிறைச்சாலை வளாகம் அதிகாரி இன்று ஆய்வு
ADDED : ஜூன் 04, 2025 12:31 AM
பெ.நா.பாளையம்:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரோடு, மத்தம்பாளையம் அருகே கட்டப்பட்டு வரும் புதிய சிறைச்சாலை வளாகத்தை, இன்று காலை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக தலைவர் சைலேஷ் குமார் யாதவ் நேரில் ஆய்வு செய்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு, கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிளிச்சி ஊராட்சி ஒன்னிபாளையம் செல்லும் வழியில் புதிய சிறைச்சாலை வளாகம் கட்டுமான பணியை காணொளியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கட்டுமான பணிகளை இன்று காலை, 9.00 மணிக்கு, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சைலேஷ் குமார் யாதவ் நேரில் பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளார்.