ADDED : ஜன 07, 2024 09:08 PM
அன்னுார்:அல்லிக்காரம்பாளையத்தில், கான்கிரீட் சாலை பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
ஒட்டர்பாளையம் ஊராட்சி, அல்லிக்காரம் பாளையத்தில், துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், சத்துணவு மையம் உள்ள பகுதி மற்றும் அதனுடைய பின்புறம் கான்கிரீட் சாலை அமைக்க பத்து ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 14 அடி அகலம் 700 அடி நீளத்திற்கு புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கியது. பணி நிறைவு பெற்றது.
இதையடுத்து நேற்றுமுன்தினம் கான்கிரீட் சாலை பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் சுமதி, ஒன்றிய கவுன்சிலர் லோகநாயகி, வார்டு உறுப்பினர் ஜானகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றியதற்காக அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.