/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மூன்றாம் பருவத்திற்கு 'ஆன்லைன்' பயிற்சிமூன்றாம் பருவத்திற்கு 'ஆன்லைன்' பயிற்சி
மூன்றாம் பருவத்திற்கு 'ஆன்லைன்' பயிற்சி
மூன்றாம் பருவத்திற்கு 'ஆன்லைன்' பயிற்சி
மூன்றாம் பருவத்திற்கு 'ஆன்லைன்' பயிற்சி
ADDED : ஜன 04, 2024 12:11 AM
கோவை : எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பாடங்களை கையாள்வது குறித்து, ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் சிலபஸ் அடிப்படையில், பாடங்கள் நடத்தப்படுகின்றன.
மழை காரணமாக, அதிகநாட்கள் விடுப்பு வழங்கப்பட்டதால், நேற்று அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு, கற்பித்தல் பணிகள் துவங்கின.
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தால், மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும் என்பதால், ஆன்லைன் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து விளக்கம் பெறலாம். ஆசிரியர்களுக்கான பிரத்யேக இணையதளமான, தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்மிலும், கற்பித்தல் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
ஆன்லைன் பயிற்சிக்கான அட்டவணை விரைவில் பள்ளிகளுக்கு அனுப்பி, மாவட்ட அளவிலான கருத்தாளர்கள் மூலம், பாட சந்தேகங்களை விளக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.